உன் உப்பில் பெய்த மழை

ஒரு கவள உப்பில்
துவைத்து வந்த வானம்.
ஈரங்களின் கனவினை
மேகங்கள் திருடிய
ஆதிக்குழப்பத்தில்
திசைகள் குழம்பி
வெறுண்ட கப்பல்களாய்
ஆகாயமெங்கிலும்
பூச்சிக் கூட்டங்களாயின.
மென்கரு தாங்கிய
வன்மிருகங்கள் இறைக்கொரு
விலங்காய் ஊடித்தேடின.
பாலகன் மறுத்த
இனிப்புக்குப்பிகள்
விண்மீன் திரலாய்
சிதறிய வான்கோப்பையுள்
பாய்ந்த எறும்புகள்
தோற்றுக்கொட்டின
சாரல் மழையென.
கலந்த கடலின்
கரையின் ஓரமிருந்த
பாலகன் கையில் உப்பு.

எழுதியவர் : ஸ்பரிசன் (5-Mar-18, 7:43 pm)
சேர்த்தது : ஸ்பரிசன்
பார்வை : 68

மேலே