எவன்டா என்னை வைத்தியர்னு சொன்னவன்

அய்யா, வைத்தியர் இருக்கிறாருங்களா? (பதில் இல்லை). அய்யா மருத்துவர் இருக்கிறாருங்களா? ( இதற்கும் பதில் இல்லை)
😊😊😊😊
(உள்ளே இருந்து மருத்துவர் வைத்யநாத்தின் குரல்):
டேய் முருகா, எவன்டா வைத்தியர், மருத்துவர்னு சொன்னவன். அவனை உள்ள அனுப்புடா.
😊😊😊😊
(உள்ளே) வைத்தியரய்யா வணக்கமுங்க. ( வைத்யாநாத் கடுஞ்சினத்துடன் முறைத்துப் பார்க்கிறார்). மருத்துவரய்யா வணக்கமுங்க.
😊😊😊😊😊
(மருத்துவர் வைத்யநாத் கொதிப்புடன்) ஏன்டா நோயாளிப் பயலே, உனக்கு எவ்வளவு கொழுப்பு இருந்தா என்னப் பாத்து 'மருத்துவர், வைத்தியர்' னெல்லாம் சொல்லுவ நீ.
😊😊😊😊😊
அய்யா வைத்தியர் அய்யா, மருத்துவரய்யா எனக்குத் தமிழப் பற்று கொஞ்சம் அதிகமுங்க. நான் ஆங்கிலச் சொற்களைக் கலந்துபேசுவது எனக்குப் பிடிக்காதுங்கய்யா வைத்தியரய்யா, மருத்துவரய்யா.
😊😊😊😊😊
என்னடா கொத்தெலும்பு ஒடம்ப வச்சிட்டு என்னை வைத்தியர், மருத்துவர்னு சொல்லி என் மனதைக் காயப்படுத்தற?
😊😊😊😊
மருத்துவர் நல்ல தமிழச் சொல். வைத்தியர் சமஸ்கிருதத்திலிருந்து மருவிய சொல். நான் உங்க மனசை எப்பிடி காயப்படுத்தினேன்னு சொல்லுங்கய்யா மருத்துவரய்யா, வைத்தியரய்யா.
😊😊😊😊
டேய் குச்சி ஒடம்புக்காரப் பயலே அந்த வார்த்தங்களத் திரும்பத் திரும்ப சொல்லாதடா. நான் எம்பிபிஸ், எம்எஸ் முடிச்சிட்டு இங்கிலாந்தில எம்சிஹெச் முடிச்ச, பெரிய படிப்புப் படிச்ச டாக்டருடா. என்ன "டாக்டர் வைத்யநாத் இருக்கிறாரா"-ன்னுதான் கேட்டிருக்கணும். இவ்வளவு பெரிய படிப்புப் படிச்ச நானும் நாட்டு வைத்தியம் பாக்கறவங்களும் ஒண்ணா.
😊😊😊😊
நான் அப்பிடி சொல்லிலீங்க அய்யா. நான் பாமக வட்டச் செயலாளர். எங்க கட்சி நிறுவனர் பெரிய அய்யா மற்றும் சின்ன அய்யா பேருங்களுக்கு முன்னாடி மருத்துவர்னுதான் எழுதுவோம், பேசுவோம். அவுங்களும் ஆங்கில மருத்துவம் படிச்சவங்க தான்.
😊😊😊😊
உங்க தலைவருங்க முழுநேர அரசியல்வாதிகள். நான் முழுநேர டாக்டர். பெரிய படிப்புப் படிச்ச உயர்நிலை சிறப்பு மருத்துவ நிபுணர். என்னை 'டாக்டர் வைத்யநாத்'-ன்னு தான் சொல்லணும். உன்ன மாதிரி ஆளுங்கெல்லாம் "ட்ரீட்மென்ட்' (மருத்துவம்) குடுத்தா சரிப்படாது. நீ போ வெளில. இந்நப் பக்கம் வந்து தொலைக்காத.
😊😊😊😊😊
சரிங்கய்யா மருத்துவரய்யா வைத்திரய்யா. போறதுக்கு முன்னாடி உங்களுக்கு ஒரு வேண்டுகோள். உங்க பேரு சமஸ்கிருதப் பேரா இருக்கு அதையும் ஆங்கிலத்தில மாத்திவச்சுட்ட நல்லதுங்க. போறங்கய்யா டாக்டர்லீடர், மெடிக்கல்லீடர் அய்யா.
😊😊😊😊
(கடுகடுப்புடன்) போய்த் தொலைடா குச்சிக்காலா.
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■சிரிக்க அல்ல. சிந்திக்க.

எழுதியவர் : மலர் (6-Mar-18, 12:48 am)
பார்வை : 296

மேலே