கூட்டான்சோறு

ஐந்து வீட்டு அரிசி எடுத்து
காட்டுக்குள் அடுப்பு மூட்டி
மண் பானை அதில் வைத்து
சமைப்பது என்னவென்று
ஒருவருக்கும் தெரிந்திராத
ஆளுக்கொரு யோசனையில்
பக்குவமாய் சோறாக்கி
வீட்டுக்கு தெரியாம கொண்டுவந்த
பொருட்களை குழம்புவச்சு
டேஸ்ட் பார்க்க உள்ளங்கையில்
சுவைத்ததை நினைக்கையில்
இன்னும் நாக்கில் எச்சில் ஊரும்
வாழை இலைவெட்டி
காட்டுக்குள் பந்தியிட்டு
உண்ட உணவிற்கு ஒருபோதும்
மறக்க நினைக்காத நினைவுகள்