மரண வலி
![](https://eluthu.com/images/loading.gif)
உன்னை மறக்க வேண்டும் என
நான் நினைத்ததும் இல்லை,
நினைக்க போவதும் இல்லை...
ஆனாலும்
உன்னால் ஏற்பட்ட
என் இதய காயத்தை
அழிக்க முடியாது
என தெரிந்தும்
மறைக்க ( மறக்க )
முயற்சிக்கின்றேன் ..
ஆனாலும் விம்பமாகின்றாய்
என் விழிகளில் கண்ணீராக...
என் கவிதைக்கு உயிர் கொடுத்த
உன் கண்ணீருக்கு நன்றி ..!!