அவன் தந்த முத்தங்கள்

அவன் கன்னத்தில் தந்த முத்தங்கள்
அத்தனையும் நற்பவளங்கள் என
மனதில் பதிந்துவிட்டன
காதல் சின்னங்களாய்
அவற்றைக் கற்பனையில்
கோர்த்துவைத்தேன் அணிந்தேன்
முத்தங்கள் ஆரமாய் மனதில் ,
தனிமையில் நான் இருக்கும்போது
அவனை என்னுள் காணவைக்கும்
நற்பவள முத்தங்கள்ஞாபக
சின்னங்கள் என் மனக்கண் முன்னே
நிற்கும் வாழ்நாள் முழுவதும்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (17-Mar-18, 5:05 am)
பார்வை : 141

மேலே