வேண்டா காதல்

வேண்டா காதலாக்கி
வெறுத்து எனை
வெட்டி விட்டாய்

நானும்....

வீசி எறியத்தான்
நினைக்கிறேன்
விருப்பத்தை
மனதிலிருந்து....

விடாப்பிடியாக
வேர் விட்டு
விசித்திர
விருட்சமாகி

வின் முட்டி
வளர்ந்து
விம்ம வைக்கிறதே...
என் செய்வேனடா....??

எழுதியவர் : இன்னிலா (18-Mar-18, 1:20 pm)
Tanglish : vendaa kaadhal
பார்வை : 126

மேலே