மன தென்றல் மலர் மொட்டு


கருத்துப் பக்கங்களெல்லாம்
இங்கே வெறுமையாய் கிடக்கின்றன

எனகென்றும் உனகென்றும்
சஞ்சு இதற்காகவா பக்கங்களை
விரித்து வைத்தான்

தொட்டோம் பார்த்தோம் என்பது பார்வை
படித்தோம் இது மனதில் பட்டது
என்பது கருத்து

கருத்தினை தெரிவிக்க
ம், ஆ,ஒ ...ஒற்றை வார்த்தைகள்
போதுமே

உங்கள் பொன்னான வாக்குகள்
சும்மாவா காஞ்சி பட்டு
அது............தனி

மனம் மொட்டாக மூடிக் கிடந்தால் எப்படி ?

மன தென்றல் வீசட்டும்
மலர் மொட்டுக்கள் விரியட்டும்
கவிதை
மன மேடையில் அரங்கேறட்டும்
உங்கள் ரசிகன் கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (8-Aug-11, 8:40 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 361

மேலே