உதவும் மனங்கள் தெய்வத்தின் கரங்கள்------By Staff Oneindia தமிழ்----A Father Needs Help To Save His Little Girl From Leukemia
எனது இரண்டரை வயதான மகள் தான் சம்பிரிதி. அவளை இப்பொழுது தான் பள்ளியில் சேர்க்க ஆசைப்பட்டுள்ளேன். அவளும் அதை நினைத்து ரொம்ப சந்தோஷமாகவும் உற்சாகமாகவும் துள்ளிக் குதித்து கொண்டு இருக்கிறாள். இப்பொழுதே பொம்மைகளுடன் விளையாடுவது, பாட்டு பாடுவது, கலர் பண்ணுவது என்று தன் நேரத்தை செலவு செய்து கொண்டிருக்கிறாள்.
அவள் ஒரு சுட்டி பெண். எப்பொழுதும் மற்ற குழந்தைகளுடன் ஓடியாடி விளையாடிக் கொண்டே இருப்பாள். இதனால் ஒரு நாள் அவள் கீழே விழுந்ததில் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே ஹாஸ்பிட்டலுக்கு தூக்கிச் சென்றோம். இரத்தம் அதிகமாகப் போயிருந்தது. அவர்கள் இரத்த பரிசோதனையும் செய்ய சொன்னார்கள். அடிக்கடி செக்கப்புக்கும் போய் வந்தோம். அப்பொழுது வந்த இரத்த பரிசோதனை முடிவு எங்கள் கனவு உலகத்தையே உடைத்து விட்டது.
ஆம். சம்பிரிதி இரத்தப் லுகேமியா என்னும் ஒருவகை ரத்தப் புற்றுநோயால் பாதிப்படைந்து உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். உடனே அவளுக்கு ஹூமோதெரபி செய்ய வேண்டும் என்று அவர்கள் கூறினார்கள். நான் ஒரு சின்ன ஹோட்டலில் சமையல்காரனாக வேலை பார்க்கிறேன். எனது மாத வருமானம் வெறும் 10,000 ரூபாய் தான். எனது மனைவி வருமானமும் கிடையாது. எந்த சேமிப்பும் செய்வதற்கு கூட பணம் இருந்ததில்லை. அன்றாட வாழ்க்கையை எப்படியோ சமாளித்து வாழ்கிறோம்.
அவளின் சிகச்சைக்காக பணத்தை திரட்ட அலைந்தேன். என் நண்பர்கள், உறவினர்கள், என்னுடன் பணிபுரிபவர்கள் என எல்லோரிடம் இருந்தும் சிறிய தொகையைக் கடனாக பெற்றோம். அவளுக்கு எப்படியாவது சிகிச்சை அளிக்க வேண்டும் என்பது மட்டுமே என் நினைப்பாக இருந்தது.
அவளின் வலியை என்னால் உணர முடிகிறது. என் கண்முன்னே அவள் வலியால் துடிப்பதும், எண்ணிலடங்காத ஊசிகளும் ஒரு தந்தையாக என்னை கலங்க வைக்கிறது. அவளால் உட்காரக் கூட முடியாத நிலை. எனது மனைவி தான் அவளை தன் மடியில் உட்கார வைத்து அவளுக்கு பிடித்த கார்ட்டூன் வீடியோக்களைக் காட்டி அவளது வேதனையை மறக்கடித்து சமாளித்து கொண்டு இருக்கிறேன். அவளால் உணவை கூட விழுங்க முடியாது. அந்த வேதனையால் அவளுக்கு பசி கூட தெரிவதில்லை. வாழ்க்கையில் எதிர்வரும் வேதனைகளை தாங்கித் தான் ஆக வேண்டும் என்று அவளிடம் எப்படி சொல்வேன். இரண்டரை வயது குழந்தை அவள், ஆனால் அவள் அனுபவிக்கும் வேதனையோ மரண வேதனை. அதை நினைக்கும் போது என்னையும் அறியாமல் அழுது விடுவேன்.
அவள் ஹாஸ்பிட்டலில் இருந்து குணமாகி, மற்ற குழந்தைகள் போல் பள்ளிக்கு செல்ல வேண்டும் என்றால் அவளுக்கு இந்த சிகிச்சை தேவை. மருத்துவர்கள் இதற்கு 18 லட்சம் வரை ஆகும் என்று கூறுகின்றனர். என்னிடம் உள்ள எல்லாவற்றையும் விற்றால் கூட என்னால் அந்த பணத்தை பெற இயலாது. நீங்கள் நினைத்தால் என் செல்ல மகளின் உயிரை காப்பாற்ற முடியும். அவள் படும் வேதனையைத் தீர்க்க முடியும். உங்கள் உதவிகள் ஒவ்வொன்றும் என் மகளின் வேதனையைக் குறைக்கும். அவளும் மற்ற குழந்தைகள் போல் பள்ளிப்பருவம் கண்டு மகிழ்ச்சியாக வாழ முடியும்.
ஒரு குழந்தையின் பிஞ்சு ஆசைகளும், ஒரு தந்தையின் கனவும் சந்தோஷமும் நீங்கள் தரும் உதவியின் பரிசாக இருக்கட்டும்.
எனக்கு உதவுங்கள். என் குழந்தையின் முகத்தில் மகிழ்ச்சியைக் காண எனக்கு உதவிக்கரம் நீட்டுங்கள். கடவுளையும் பிராத்திக்கிறேன்.
How to help
oneindia செய்தி
Written By: Staff