பிறந்த நாள்

முகமறியாது கூறுவோம் ...
மனமகிழ்ந்து வாழ்த்துவோம்....
செய்வதறியாது திகைப்போம்...
செய்வதறிந்து மனமகிழ்வோம்...

பிடித்தவை கிடைக்கும் நாள்
பிறந்த நாள்....
பிடித்தவர்களெல்லாம் சந்திக்கும்
நாள் பிறந்த நாள்....

இன்பதறிச்சி தரும்
நண்பர்கள்.....
மனமகிழ்ச்சி தரும்
பெற்றோர்கள்......
முத்தமழை தரும்
மழலைகள்.....

வருடத்தில் ஒரு முறை
நினைவோ! வருடம் முழுவதும்
எதிர்பாராத நேரத்தில் எழும்பி
வரும் அலைகள் போல....
நினைத்து பார்க்காத நேரத்தில்
நிரம்ப கிடைக்கும் அன்பளிப்புகள்....

வந்த அன்பளிப்புக ளெல்லாம்
அலங்கார பொருட்களாய்....
அவர்கள் இல்லாத நேரத்தில்
நினைவு பொருட்களாய் .....

சாதாரண பிறந்த நாள்
சாதனை நாளாக மாற...
எவ்வருடம் போல்
இவ்வருடமும் இயல்..

எழுதியவர் : bhuvichindan (26-Mar-18, 3:43 pm)
Tanglish : pirantha naal
பார்வை : 212

மேலே