நாமல்லாத நாம்
இருபால் அன்பால்
கருவாய் உருவானோம்
ஐயிரு திங்கள் ஆயினும் , சேயின்றி யாருமில்லை
இருந்தும் இருந்தோம்.
அறுவடை காலம்......
இழையறுந்து வெளிவர,
சேர்க்கைகள் சேமிக்க,
உறுப்புகளோடு உணர்வுகளும் வளந்தது.
எதிர்மறை ஏவல்கள் கூடவே இடம் கொள்ள ,
வாழ்க்கையும் நகர்ந்தது ....
மெஞ்ஞானம் வேடிக்கை பார்க்க; விஞ்ஞானம் கேளிகை செய்ய
சரியென்று ஒரு கூட்டம் ; தவறென்று ஒரு கூட்டம்
சத்தியம் ஒரு புறம் ; சாத்தியம் மறு புறம்
தேவை ஒன்றாக ; தவிர்க்கை மற்றொன்றாக
நம்முறை ஒன்றாக ; நடைமுறை வேறொன்றாக
மொத்தத்தில் “நாம்” நாமில்லை
இழைய வளர்ப்புக்காய்
குவலயம் எனும் ஏகார் குவளையில்
மாட்டிக்கொண்டு
அகக்காரணி புறக்காரணி ஆட்சி கொள்ள
உதித்த இடம் போல இருட்டறையில் உதிர்ந்து கொண்டிருக்கும்
manfucaturing மானுடம் தான் “ நாமல்லாத நாம்"