காதல்
சென்னையில் இருந்து திண்டிவனம்
பேருந்தில் ஒலிக்கிறது
உனக்கென இருப்பேன்
உயிரையும் கொடுப்பேன்
உன் மடியில் இவ்வுலகம் மறந்து நான் கிடக்கிறேன்...
இப்பொழுது என் உலகில் நீ மட்டும் தான்...
ஒரே ஒரு வித்தியாசம்
நாம் திருமணம் செய்து கொண்டு
காதலிக்கிறோம்...
~ பிரபாவதி வீரமுத்து