காதல் ஏக்கம்

என் வீட்டு முற்றத்தில் பெய்யும் மழை !
உன் வீட்டு முற்றத்திலும் பெய்கிறது !
என் வீட்டுத் தோட்டத்தில் பூக்கும் ரோஜா !
உன் வீட்டு தோட்டத்திலும் பூக்கிறது !
என் வீட்டில் வட்டமிடும் நிலா !
உன் வீட்டிலும் வட்டமிடுகிறது !
என் வீட்டில் உலாவும் தென்றல் !
உன் வீட்டிலும் உலவுகிறது !
ஆனால்..,
என் இதயத்தில் நுழைந்த காதல் !
உன் இதயத்தில் நுழையவில்லையே !!!