வெள்ளூர் ராஜா ரசித்த கருத்துரையாடல்

porchezhian • 04-Mar-2012 6:15 pm
சங்கரன் ஐயா என்னை ஏன் மறந்திர்கள்

Reply Vote Up Vote Down 0 வாக்குகள்
user photo
கவின் சாரலன் • 04-Mar-2012 6:49 pm
பொன்னையும் பொற்கிழியையும் புலவர்கள் மறந்ததாக சரித்திரமே இல்லை இந்தக் கவிஞன் கிடைத்த
பொற் செழியனை மறத்தல் சாத்தியமா?
----அன்புடன் ,கவின் சாரலன்

reply Vote Up Vote Down 0 வாக்குகள்
user photo
ரதி தேவி.R • 12-Apr-2012 12:01 am
பொன்னையும் பொற்கிழியையும் புலவர்கள் மறந்ததாக சரித்திரமே இல்லை--சங்கரன் ஐயா

தயவு செய்து இன்னொரு முறை இந்த வாசகத்தைப் பயன்படுத்தாதீர்கள். பொன்னுக்கும் பொருளுக்கும் புலவன் எழுதுவது கிடையாது. அவை அவனது நினைவிலும் நிற்பவை இல்லை. அப்படி பொன்னையும் பொற்கிழியையும் புலவன் நினைத்திருந்தால் கால காலமாக கவிஞன் தரித்திரத்தில் செத்துக் கொண்டிருக்கமாட்டான்.

reply Vote Up Vote Down 0 வாக்குகள்
user photo
கவின் சாரலன் • 12-Apr-2012 4:48 pm
பொன்னையும் பொற்கிழியையும்
நிகர்த்தவர் எனக்கு பொற்செழியன் என்று சொல்வதற்காக அவ்வாறு எழுதினேன். உங்கள் விருப்பத்திற்கு
செவிசாய்த்து நான் அவ்வாறு சொல்வதை தவிர்க்கலாம் ஆனால் இலக்கிய வரலாற்றினைப் புரட்டி
பார்த்தீர்களானால் இது கண்கூடு
போற்றலும் புரத்தலும் இலக்கிய
நாகரீகமாகக் கருதப்பட்டது
ஆற்றுப்படை என்று ஒரு பழந்
தமிழ் இலக்கிய வகை உண்டு அதன்
அடிப்டைக் கருத்து : பரிசு பெற்ற புலவன்
பரிசு விழையும் புலவனை ஆற்றுப்
படுத்துவான் அல்லது வழிப் படுத்துவான் அவ்வழியில் அருள் வேண்டி நிற்கும் பக்தனுக்கு அருள் வழி
காட்டிடும் "திருமுருகாற்றுப் படை
இலக்கியத்தை செந்தமிழ் புலவர் நக்கீரனார் இயற்றினார் நக்கீரர்
பொருளுக்காக அல்ல அருளுக்காகப்
பாடினர்
கம்பர் தன்னைப் போற்றிப் புரந்த
சடையப்ப வள்ளலை தனது இராமாயன்
காவியத்தில் பத்துப் பாட்டிற்கு ஒரு
பாட்டில் நன்றியுடன் நினைவு கூர்ந்தார்
பக்திப் புலவர்கள் ஆழ்வார்களும்
நாயன்மார்களும் கடவுளிடம் அருள் வேண்டியே பாடினார்கள்
ராமா நின் நாமம் இனியது
என்று உருகி உருகிப் பாடிய தியாகப்
பிரும்மம் உஞ்சவர்த்தி எடுத்துதான்
உண்டு வாழ்ந்தார் மன்னன் அழைத்த
போதும் "வாரேன்" ராமனே என்
மன்னன் என்றார்
புற நானூற்றுச் செய்தி :
சோற்றுப் பருக்கையை ஏந்தி எறும்புகள்
சாரை சாரை போவதைப் பார்த்த ஒரு
புலவன் வருவோர் போவோரிடம்
கேட்கிறான் "பசிப் பிணி மருத்துவன்
இல்லம் அணித்தோ சேய்த்தோ?" என்று,
பாடிப் பாடி பரிசு கிட்டாத ஒரு
புலவன் "இல்லாது சொன்னேனுக்கு
இல்லை என்றான் யானும் என் குற்றத்தால் ஏகுகின்றேன் "என்று மனம்
வெதும்பி பாடினான் . ஏன் பாரதிகூட
சீட்டுக் கவி எழுதினான் என்பது
ஆச்சரியம் ஆனால் உண்மை
இன்று திரையில் எழுதுகிறவர்கள்
பொருட்பாதானே எழுதுகிறார்கள்
உங்கள் கருத்திற்கு ஒரு முத்தாய்ப்பான ஒரு கவிதையை நான்
ஏற்கனவே எழுதி இருக்கிறேன்
அக்கவிதை இதோ :
"வறுமைக்குத் தோழன் ஆயினும்
வார்த்தைகளில் வள்ளல்
கவிஞன் என்பது பேர்
கற்பனை அவனுக்குத் தேர் "
பொருளோ இலவசமோ அதை கவிஞன்
தான் தீர்மானிக்க வேண்டும் என்ன
நான் சொல்வது சரிதானே ரதி தேவி
தங்கள் கருத்திற்கு நன்றி
கவியுள்ளத்திற்கு என் வாழ்த்துக்கள்
---அன்புடன்,கவின் சாரலன்

இன்று வெள்ளூர் ரசித்த கருத்துரையாடல்
மீண்டும் படித்தேன் . பிடித்திருந்தது . உங்களுக்காக.

எழுதியவர் : கவின் சாரலன் (6-Apr-18, 5:03 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 416

மேலே