நமக்கு முக்கியம் ஐ பி எல் தான்
நமக்கு முக்கியம் ஐ பி எல் தான்
ஆடு, மாடு போன்ற ஜீவராசிகளையும்
புடவை, ஜமுக்காலம் போனற பொருட்களையும் தான்
முன்பெல்லாம் ஏலத்தில் விடுவார்கள்
இப்பொழுது மனிதர்களை . . .
ஏலத்தில் விலைபோன
அடிமைகளின் ரசிகனாக இருப்பதை
யாருமே இங்கே அசிங்கமாக நினைப்பதில்லை
அடிமைகளாய் போனதை பற்றி
அடிமைகளுக்கும் கவலையில்லை
என்ன செய்ய????
நமக்கு ஐ பி எல் தான் முக்கியம்
காவிரி வராமல் போனால் நமக்கு என்ன?
விவசாயி தற்கொலை செய்து கொண்டால்
நமக்கு என்ன?
ஒவ்வொரு நாளும் நம் உரிமைகளும்
நம் வாழ்க்கையும் களவு போவதை பற்றி
நமக்கு என்ன கவலை
ஊரே தீயில் எரிந்த பொழுது
இசையை மீட்டிய மன்னனுக்கும்
நமக்கும் ஒன்றும் பெரிய வித்தியாசமில்லை
நாளைய வரலாற்று பக்கங்களில்
ஐ பி எல் இருக்கும்
வீரர்களின் பெயர்கள் இருக்கும்
நாமும் இருப்போம்
இந்த வரலாற்றை
பசியோடும் பஞ்சத்தோடும்
வாழதகுதியற்ற பூமியில்
வாழ வக்கற்ற நிலையில் தவிக்கும்
நம் தலைமுறைகளின் கைகளில்
இருக்கும் பதிவுகளாய்
இதை பற்றி எல்லாம் நமக்கு என்ன கவலை????
நமக்கு ஐ பி எல் தான் முக்கியம்
நமக்கு உணவளித்தவனின் மரணம்
தண்ணீர் இன்றி தவிப்பவர்கள் பற்றிய செய்திகள்
எவை எல்லாம் ஆபத்தோ
அத்தனைக்கும் அனுமதி
என எல்லா செய்திகளும்
இருக்கும் ஏதோ ஒரு மூளையில்
சிறியதாக
இனி ஐ பில் செய்திகளே
முதன்மை பெறுவதையும்
தவறாமல் படிப்போம்
நாம் என்ன மனிதர்களாய்
இருந்தால் தானே இதை பற்றி சிந்திக்க
நமக்கு ஐ பி எல் தான் முக்கியம்
எவன் வாழ்ந்தால் என்ன
செத்தால் என்ன
ந.சத்யா
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
