எனக்கும் காதல் வந்தது

உத்தரவின்றி உள்ளே வராதே
இங்கு மகளிர் மட்டும்
இது மூத்த குடிமகன்களுக்கு
பார்வையாளர்கள் மட்டும்
இது வாடகையாளர்கள் நேரம்
போன்ற தடைகள் எல்லாம்
காதலுக்கு கிடையாது
காதல் எங்கும் எதிலும் நிறைந்துள்ளது
ஜாதி மதம்
மொழி நிறம் உருவம்
என எந்த பேதமில்லாமல்
இரு உள்ளங்களின்
தூய சங்கமமே காதல்....

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (8-Apr-18, 4:39 pm)
பார்வை : 440

மேலே