இசையடி நீ, கீதமடி நான் உனக்கு

இசையடி நீ ,இன்னிசையடி நீ எனக்கு,
உன் பேச்சில் என் மூச்சு,
அது எழுப்புதே குயில் பாட்டு,
நடையில் கோலமயில் நீ,
அதன் ஓசையில் தில்லானா
நீ எனக்கு,
உன்னருகே நான் வந்தபோது
நீ என்னை கட்டிஅணைத்திடும்போது,
என் காதில் வந்து மோதுது சஹானா,
ஓடி விளையாடி கேளிக்கைகள்
பல செய்யம்போது கண்ணே,
என் காதில் மோகனமாய்
இசைக்கிறாயடி நீ.,

கோபத்தில், என்னோடு ஊடலில்
மோதும்போது கம்பீர நாட்டையடி
நீ எனக்கு ; மீண்டும், அமைதியடைந்து
என்னில் சாந்தி சேர்க்கையில்
நீ சாமா, என்னுள் என் மனதில்
தன்னொளி தந்து பக்தி பெருக்கையில்
நீ எந்தன் கரஹரப்ரியா,இப்படி
எனக்கு இசையாய் இருக்கின்றாயடி நீ,
உன் மடியில் நான் தலைவைத்து
உறங்கிட நினைக்கையில் , நீ பாடும்
பாட்டில் நீலாம்பரியடி நீ ,
நீ என் இசை, இன்னிசையடி,
நான் என்றும் கீதமடி உந்தன் கீதம்.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (12-Apr-18, 11:31 am)
பார்வை : 407

மேலே