புத்தாண்டே வருக

புத்தம் புது ஆண்டே வருக!
நித்தம் ஓர் கதை தமிழர் வரலாற்று நாட்குறிப்பில் எழுதிச் செல்க!
யுத்தம் இல்லா நிசப்தம் ஞாலத்தில் பரவிட செய்க!
சப்தம் இல்லா இனிய பறவை கீதத்தில் காலை எழுக!
முத்தம் இடும் மரங்கள்
நிலமகளில் எங்கும் நிறைக!
மொத்தம் மனித சுயநலம் வீழ்ந்து, பொதுநலம் எங்கும் வளர்க!
ரத்தம் சிந்தும் மொழி, இனம், மதம் இனி வேண்டாம், மனிதநேயம் எங்கும் பெருகுக!
நாத்தம் நிறைந்த கார்ப்ரேட் கவர்ச்சிப் பொருள் அழிக, உழவன் சிந்தும் நறுமணம் எங்கும் வீசுக!
சுத்தம் இல்லா கயவர்கள் அரசியலில் வீழ்ந்து, மனிதம் பூத்த இளம் பூஞ்சோலையில் அவை கூடுக!
தத்தம் பேசும் கிள்ளை தொழில் ஒழிந்து, கல்வி பூப்பறிக்க சோலை செல்க!
சுத்தம் இல்லா காற்று மழையில் கரைந்து, நித்தம் புது காற்று வானில் தவழுக!
நித்தம் இல்லை என்ற கொடுமை வீழ்ந்து, அன்பு, மகிழ்ச்சி, இன்பம், காதல் பொங்கி நீ வருக!

நின்னைப் படைத்த மனிதனுக்கு மட்டுமல்லாது, எல்லா உயிர்களுக்கும் இதை தருக!
--- ச. செந்தில் குமார்
தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நன்பர்களே!

எழுதியவர் : ச. செந்தில் குமார் (14-Apr-18, 4:57 am)
சேர்த்தது : ச செந்தில் குமார்
Tanglish : puthaande varuka
பார்வை : 172

மேலே