வசந்த ஒப்பந்தம்
வசந்த ஒப்பந்தம்
==================
அவமானக் கிளைகளில்
பழுத்து அழுகி நாற்றமெடுத்தப்
பழங்களில் இருந்து உதிரும்
அனுபவ விதைகளை மறுபடியும்
வாழ்க்கை என்னும் பதப்பட்ட மண்ணில்
விதைத்துக் கண்ணீர் ஊற்று.
கால வயல்களில் முளைத்தெழும்
மரங்கள் வளர்ந்து வளர்ந்து
கிளையசைத்து காயப்பட்ட இதயத்தின்
வேர்களிலும் தென்றலாய் ஒத்தடமிட்டு
உலர்த்தும் வசந்த ஒப்பந்தம் ஒன்றை
உனக்காய் எழுதிக் கொடுக்கும்.
*
**மெய்யன் நடராஜ்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
