ஊழலில் வாழும் உலக மனித அரசியல்

இனத்தைத் தூண்டும் அரசியல்,
மதத்தைக் கொண்டும் அரசியல்,
சாதிகளால் தாங்கிப் பிடிக்கப்படும் அரசியல்,
பொய்யர்கள் இவர்கள் நறுக்கப்பட வேண்டியவர்கள்...

அங்கொரு ஊழல்,
இங்கொரு ஊழல்,
எங்கு பார்த்தாலும் ஊழல்,
மானிட பிறப்பே பெரும் குற்றம் என்று எங்கும் பறைசாற்றும் ஊழல் மையம்...

பொய் கற்று கொடுத்தார்,
பொய்யில் வாழ்வது காணச் செய்தார்,
பெரியவர்கள் சொல்வதெல்லாம் பொய்களே, கள்ளமனம் பாறை போலே வளர்ந்துவிட்டதாலே...

சொன்னபடி வாழ்வதே சத்தியமெனப்படுவது..
நேரத்திற்கேற்ப தன்னை மாற்றிக் கொள்வது வெற்று வேடமே...
அது பொய்மை,
அது என்றும் பொய்மை...

ஆடம்பரவாதிகளைக் கண்டாலே வெறுப்பு.
மரியாதை இல்லாது பேசுவோரிடம் பேசுவதே பெருங்குற்றம்.
விலகி இருந்துவிடுங்கள் போலி உறவுகளைவிட்டு...
வெறுக்கின்றேன் போலிகளை,
வெறுக்கின்றேன் போலி காதலர்களை.
வெறுக்கின்றேன் போலியாய் வாழ்பவர்களை...

போலிகளோடு கலவாது வாழ்வது உத்தமம்.
போலிகளின் விருப்பமெல்லாம் பணமுடிப்பை நோக்கியே இருக்கும்.
அயர்ந்த நேரம் ஒன்றையொன்று ஏமாற்றி ஓடும்.
இதெல்லாம் வாழ்க்கையா என்று காறி உமிழத் தோன்றும் காண்போர்க்கு.

உடல் மேல் கொண்ட விருப்பமெல்லாம் நிலையல்ல,
உடல் விட்டே உயிர் போனால்...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (19-Apr-18, 9:58 am)
பார்வை : 2452

மேலே