தமிழுக்கு ஒரு சிறு தொண்டு

ழகரம்,ளகரம்,லகரம்
இம்மூன்று எழுத்துக்கள்
தரும் தமிழ் சொற்கள்
தமிழ்மொழிக்கு ஆபரணங்கள்
ஆயின், அவற்றை பேசும்போதும்
எழுதும்போதும் தவறு செய்தால்
ஆபரணங்கள், அலங்கோலமாகிவிடும்
எப்படி,' தமிழை' தமிள் என்றாலோ
' வாழையை', வாலை என்றாலோ
' வளத்தை' , 'வலம்' என்றாலோ
தமிழ் அறிவோம், அதன் எழுத்துக்களை
சொற்களாக்க தவறின்றி பழகுவோம்
தமிழின் மேன்மையை நிலை நிறுத்துவோம்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (26-Apr-18, 10:54 am)
பார்வை : 142
மேலே