ஆசைகள்...
உன் உதடுகளின் வரிகளில் கவிதைகள்
எழுதிட வேண்டும்...
அதை உதட்டால் இன்னொரு பிரதி எடுத்திட வேண்டும்...
உன் கழுத்தின் வளையங்களில்
தூக்கிட்டு இறந்திட வேண்டும்...
பகல் அனைத்தையும் இரவால் இருட்டிட வேண்டும்...
பின் பிடரி மயிர் கோதி இறுக்கிட வேண்டும்...
நெற்றி முதல் சுட்டு வரை முத்தங்கள் பதித்திட வேண்டும்...
சத்தங்கள் இல்லா மூன்றாம் ஜாமத்தில்
உன் மேல் கவிதைகள் கிருக்கிட வேண்டும்....
அதை கையால் அழித்திட வேண்டும்...
காதல் சேர்த்து காமம் தீர்த்து
மீண்டும் காதல் சேர்த்து
வாழ்ந்திட வேண்டுமடி...
உன் மடியிலே ஓர்நாள்
வீழ்ந்திடவும் வேண்டுமடி...!