ஏர் பூட்ட ஆசை பட்டேன்
மீண்டும் நான் ஏர் பூட்ட ஆசை பட்டேன்
என் வீட்டில் நிலம் உழுக
ஏர் இருக்க
நிலம் இருக்க
ஏர் பூட்ட மாடிருக்க
காளைகளை பூட்டினேன்
நிலம் உழுதேன்
விதைக்க விதை உண்டு
நாத்து நட செடி உண்டு
ஆனால் விதை விதைத்திட
தரமான நிலமில்லை நஞ்சு கலந்ததே ரசாயன உரமிட்டு
விதை முளைக்க நீரில்லை
வெள்ளாமை எடுக்க வழியில்லை
போதும் இந்நிலமையென்று பட்டணத்திற்கு கிளம்பி விட்டேன்
என் பிழைப்பை பார்க்க எல்லாம் என்ன வென்று சொல்வதோ