கூந்தலில் அமர்ந்த மலர்
உதிர இருந்த மலர்
உதிராமல் நின்றது
கவிஞ பாடு என்றது !
பூவிற்கு இல்லாத இந்த
பா யாருக்கு என்று
சில வரிகள் பாடினேன் !
நன்றி நவின்று மலர்
என் கரங்களில் உதிர்ந்தது !
அருகில் நடந்து சென்ற
கூலி வேலைப் பெண்ணிடம் மலர் தந்தேன்
கூந்தலில் அணிந்து நாணத்தில் சிரித்தாள் !
கூந்தலில் அமர்ந்த மலர்
வாழ்க வாழ்க என எனை வாழ்த்தியது !