அழிக்கப்பட்ட கழிவுகள்
தீடிரென ஞானக்கதவு திறந்தது.
மனம் என்பது சாகக் கிடக்கிறது.
சாட்சி மட்டும் விழித்திருக்கிறது.
உயிர் மட்டுமே உடலில் மிச்சமிருந்தது.
உணர்ச்சிகள் எல்லாம் அடங்கிப்போய் இருந்தது.
கத்தியால் ஒருவன் பூத உடலில் குத்தினான்.
வலிக்கவே இல்லை.
திருப்பி குத்த தோன்றவே இல்லை.
மேலிருந்து பாய்ந்து வந்தது மின்னல்.
குத்தியவனை கருக்கிவிட்டு சென்றது.
குத்தியதில் ஏற்பட்ட காயம் மறைந்தது.
கால்கள் நகர ஆரம்பித்தன.
நாட்டுநாடு போர் நடக்கிறது.
எல்லையருகே கவனம் என்றொரு குரல் கேட்க,
முன்னேறினேன்.
டாமாரு, டுமிரு என்ற சப்தங்கள் ஒலிக்க, முன்னேறிய கால்கள் இரண்டுக்கும் மத்தியில் மிகப்பெரிய வடிவமெடுக்க வான் நோக்கி வளர்ந்தது உடல்.
விகாரமான காட்சி கண்டு, ஆயுதங்களைச் செலுத்த அனைத்தும் பயனற்று வீழ கடவுளே என்று காலில் இரு சாராரும் சாய்ந்திருக்க,
கடவுள் உடல் வழி சொல்கிறார், " நீங்கள் மற்றவர் அழிவை விரும்புகிறீர்கள் அல்லவா? உங்களுடைய அழிவை பாருங்கள். ",என்ற மாறுநொடி அவ்விடம் அமைதியான மயானமானது.
எங்கும் பிணக்குவியல்கள்.
நெருப்பு மூண்டது.
பிணங்கள் சாம்பலாயின,
மழை பெய்தது,
அடுத்த மூன்று நாட்கள் மரம் செடிகொடிகள் தழைத்து ஓங்கி வளர ஆரம்பித்தன.