அவளோடு நடைபோட
![](https://eluthu.com/images/loading.gif)
நான் அவள்
நெற்றியில் திலகமாகி
அழகு சேர்க்க ஆசையில்லை...
கூந்தல் மலராகி
வாசம் வீச ஆசையில்லை...
கண்ணுக்கு மையாய்
கவர்ந்திழுக்க ஆசையில்லை...
காதுக்கு ஜிமிக்கியாய்
ஊஞ்சலாட ஆசையில்லை...
கைக்கு வளையலாய்
இசை மீட்ட ஆசையில்லை...
காலுக்கு கொலுசாய்
சினுங்க ஆசையில்லை. ..
அவள் காதலனாய்
நெற்றியில் முத்தமிட்டு
கூந்தல் வருடி
கண்ணோடு கண் பார்த்து
காதில் கதை பேசி
கரங்கள் கோர்த்து காலமெல்லாம்
நடைபோட ஆசை .. ........