நாகரீக தமிழன்

**நாகரீக தமிழன்*

சும்மா நச்சுனு கேட்டயா
கேள்வி *யார் நீங்கள்*
நாகரீக தமிழனாய்...

இது வெறும் வார்த்தையல்ல
மக்களின் வலி....

மனிதம் உள்ளோரை
நிலைகுலையச்செய்யும்
ஒற்றை வார்த்தை...

ஒரு வார்த்தைக்குள்
ஆயிரம் அர்த்தங்கள்
சொல்லும் அகராதி...

போராட்டத்தை தலைமை தாங்கி செல்பவர்கள் யாரும் ஹிட்லர் இல்லை நாடு சுடுகாடாய் மாற...


போராட்டத்தை ஒடுக்குபவர்கள்
தானே ஹிட்லர்கள்
நாடு சுடுகாடாய்
தானே மாறும்...

இது திரைப்படம்
அல்ல
எழுதி நடிக்க
தன்எழுச்சியாய் நடந்த வரலாறு...

25 ஆண்டுகளாய்
கேட்கப்படாத ஏழைகளின் அபலக்குறல்...

ஒரு தாய் கூட வலியுடன்
போரடித்தானே
பிள்ளையை பெறுகிறாள்...

அதற்க்காக ஒரு தாயின் போராட்டத்தை கொச்சை படுத்துவதா
ஒவ்வொரு குழந்தைக்குமா போரட்டம் என்று...

தாயுள்ளாம் கொண்டோர்க்கு மட்டும் புரியும் ஒரு தாயின் போராட்டம்...

பாசம் இருக்கதானே செய்யும் சீருடை அணிந்த காவலர்கள் மேல்...
தன்
தந்தையும் காவலர் தானே...

ஏற்றி விட்ட ஏணியை
எட்டி உதைத்தால்
அறிவிழியே விழ்வது
என்னவே நீ தான்...
நாங்கள் அல்ல...


காலாவின் நிறம்
கருப்பு அல்ல
காவி...


*நாகரிக தமிழன்*
டேவிட் சாமுவேல் ராஜா

எழுதியவர் : டேவிட் சாமுவேல் ராஜா (3-Jun-18, 10:30 pm)
பார்வை : 423

சிறந்த கவிதைகள்

மேலே