மருகேளரா ஓ ராகவா
அப்போது கேட்டிருக்கலாம்
தவறிவிட்ட உனக்கு
வேறொரு நாள் இன்றிப்போனது.
பயணத்தில் களைத்த
கடைசிப்பயணியின்
நகரக் காட்சியாய்
உருண்டு திரண்ட
குழப்பத்தில் விழுந்தது எல்லாம்.
பார்த்ததில் பழகியதில்
விடுத்ததை மறுத்தும்
மறுத்ததை பிரித்தும்
நிறுத்த நிறுத்த
ஓடும் குழந்தையாய்
மொபைலில் சிணுங்கும்
உனக்கு பிடித்த
மருகெளரா...
கேட்கிறேன்...
நீ என்ன செய்கிறாய்?