வாழ்க்கையில் அவள் தில்லானா

'தீ' யோடு 'ம்' சேர்ந்தால்
'தீம்' என்றாகிவிட அதை
தீம் தீம் என்றொலிக்க
தில்லானா பிறந்துவிடும்
அதைப்பாட மனதில்
இன்பம் பிறந்துவிடும்
அடி மனதில் -ஆயின்
தீயோடு 'ம்' சேராது
'தீ', 'தீ' என்றே புலம்ப
உள்ளமும் 'தீயாய்'
எரிந்திடும்-வாழ்க்கையும்
இப்படித்தான் தனிமையில்
தீயாய் எரிக்கும் ஆவலுடன்
சேர்ந்தால் 'தில்லானா'வாகிவிடும்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (23-Jun-18, 12:46 pm)
பார்வை : 97

மேலே