அழகு
ஊமை மொழிகள் அழகோ அழகு
அது உன் உடலசைவில் இருந்து வருவதால்...
கண்ணசைவில் கணங்கள் பல ருசிக்கிறேன்
அது இமையசைவில் இருந்து பிறப்பதால்...
உன் நடையும் ஓர் நாட்டியமென உணர்கிறேன்
அது உன் இடையோடு சேர்ந்து அசைவதால்...
வினாக்கள் தொகுக்கும் உன் விரலையும் பார்க்கிறேன்
அது அழகின் உச்சத்தில் மிதப்பதால்...
சத்தமின்றி மிச்சமாய் உன்னில் ஒரு பூ மலர்வதை ரசிக்கிறேன்
அது உன் புன்னகைக்காக பிரிந்த உதடுகள் என்பதால்...
அழகு உன்னில் எல்லாமே அழகு...