சாது மிரண்டால்
கல்போட தோட்டத்தில் நடந்த கொலை)
இலங்கையில். பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் தேயிலை தோட்டத்தில் வேலை செய்வதை கல்லூரியில் படித்து வெளியே வந்ததும் மேலும் படிப்பைத் தொடராமல் பெரும் பாலும் வாலிபர்கள் விரும்பினார்கள். காரணம் , மலை நாட்டுப் பகுதியில் வேலை செய்யலாம், நல்ல சுற்றாடல், சம்பளம், சலுகைகள், தங்க வீடு போன்ற வசதிகள் கிடைக்கும் என்பதால் .
பாறாங்கல் அருகே அமைந்த நீர் வீழ்ச்சி உள்ள ஊர் என்பதால் அந்த பின்னடைந்த கிராமத்துக்கு கல்பொட (Galboda) என்ற பெயர் வந்தது. நாவலப்பிட்டியாவுக்கும், மழை அதிகம் பெய்யும் வட்டாவள ஊருக்கும் இடையில் கல்பொட குக் கிராமம் கடல் மடத்துக்கு 6000 அடி உயரத்தில் அமைந்துள்ளது. சுற்றிலும் தேயிலை தொட்டமும். தொடர்ந்து வருடத்துக்கு 450 செ.மீ மழையும், கிராமத்தில் பலர் கண்களைக் கவரும் 98 அடி உயரம் உள்ள நீர்வீழ்ச்சியும் உண்டு இக்கிராமம் கொழும்பில் இருந்து பதுளை போகும் ரயில் பாதையில் 153 கி மீ தூரத்தில் உள்ளது
கல்பொட(Galboda) தேயிலைத் தொட்டம் கண்டியில் இருந்து இருந்து மவுண்ட் ஜீனை (Mt.Jean_ தாண்டியவுடன் இத் தேயிலைத் தொட்டம் 56 கி,மீ தூரத்தில் வருகிறது இங்குள்ள 93 அடி உயரம் உள்ள நீர்வீழ்ச்சி சுற்று பயணிகளை கவருகிறது. கலபொட தேயிலைத் தோட்டம் 1935 இல் ஸ்தாபிக்கப்பட்டது அத்தொட்டத்தில் இந்த சம்பவம் நடந்த காலத்தில் சுமார் 600 பேர் வேலை செய்தார்கள். தோட்ட பரிபாலன பகுதியில் லிகிதர்களாக சில இளம் வயதினர்கள் வேலை செய்தார்கள்
****
கொழும்பை சேர்ந்த சோமசிரி என்ற இளைஞனும் அவர்களில் ஒருவன். கொழும்பில் இருந்து பதுளைக்குப் போகும் போடிமெனிக்கே ரயில் எடுத்து நாவலபிட்டியா ஸ்டேசனுக்கு அடுத்துள்ள இரண்டாவது சிறிய ஸ்டேசன் கல்பொட ஸ்டேசன் . அதற்கு அடுத்த இலங்கையில் அதிக மழை பெய்யும் ஊரான வட்டாவல உள்ளது . கல்பொட ஸ்டேசனில் ரயிலை விட்டு இறங்கி ஒரு கையில் சூட்கேசுடனும், மழை தூரிக்கொண்டு இருந்ததால் மறு கையில் குடையும் பிடடித்த படியே தனது முதல் தேயிலை தொட்டத்து வேலைக்கு, இயற்கை காட்சிகளையும் அழகிய கல்பொட நீர்வீழ்ச்சியையும், மவுன்ட் ஜெயினையும் இரசித்தபடி வளைந்த பாதையில் சோமாசிரி நடந்து சென்றான் . அடுத்த நாள் பிரதம லிகிதருககு உதவியாளராக வேலை ஆரம்பிக்க இருந்தான். அது அவனுக்கு புது அனுபவம்.
சோமசிரி சுபாவத்தில் சற்று கோபக்காரன். கல்லுரியில் அவனை சக மாணவர்கள் கேலி செய்வது அவனுக்குப் பிடிக்காது. இரு தடவை அவர்களோடு சண்டையும் போட்டிருக்கிறான். தலமை ஆசிரியர் இரு தடவை அவனை எச்சரித்தும் இருக்கிறார். அவனுக்கு தன்னை எவரும் கேலி செய்வது பிடியாது.
“சோமா நீ முதன் முதலில் நல்ல உத்தியோகத்துக்கு ஒரு வெள்ளைக்காரன் கீழ் வேலை செய்யப் போகிறாய் . வெள்ளைக்காரர்கள் கண்டிப்பான பேர்வழிகள் என்று உன் மாமா சொன்னார் . வேலை செய்யும் போது உன் கோபத்தை குறைத்துக்கொள். நேர்மையாக நட” என்று புத்திமதிகள் சொல்லி அனுப்பினாள் அவனின் தாய் லீலாவதி .
“ அம்மே நான் வீணாகச் சண்டைக்குப் போக மாட்டேன். அனால் பொறுமைக்கும் ஓரு எல்லை உன்டு.”
“எதுவும் தேவை இல்லாமல் ஒருவரோடும் சண்டைக்கு போகாதே மகன் . உன் வேலையும் உன் பாடும் என்று இரு. ஒருவரோடும் வாக்குவாதம் செய்யாதே . உனக்கு, உன்னோடு வேலை செய்பவர்கள் இருவரோடு தங்க வீடு தருவார்கள் என்று உன் பியசேன மாமா சொன்னார் . சமையலுக்கு ஒரு வேலைகாரனும் இருப்பானாம் . உன் மாமா அந்த தொட்டத்தில் உதவி சுப்பிரீண்டனாக இருந்து 25 வருஷ சேவைக்கு பின் ஓய்வு பெற்றவர். அவரின் சிபார்சு பேரில் உனக்கு இந்த உத்தியோகம் கிடைத்து இருக்கு. உன் மாமாவின் பெயரை கெடுத்து விடாதே” எச்சரித்து அனுபினாள் அவனின் தாய் நேர்ஸ் லீலாவதி.
அவள் சில வருடங்களுக்கு முன் கணவனை ஒரு கார் விபத்தில் இழந்தவள் அதன் பின் லீலாவதியின் குழந்தைகள் இல்லாத அண்ணன் பியசேனாவின் உதவியோடு இரு மகன்களை கொழும்பு ஆனந்தா கல்லூரியில் படிப்பித்து வந்தாள். இரண்டாவது மகன் ஜெயசிரி, மூத்தவன் சோமசிரிக்கு மூன்று வயது இளமை.
****
“ சேர் கேன் அய் கம் இன் ப்லீஸ் ( Sir can I come in please)? சோமசிரி சுப்பிரீண்டன்டன் வில்சன் மரையின் (Wilson Murray) ஆபீஸ் அறைக் கதவை தட்டினான்;
“கம் இன் ப்லீஸ்” என்று வில்சனிடம் இருந்து பதில் வந்தது
மரியாதையாக அறைக்குள் சென்ற சோமசிரியை அவருக்கு முன் இருந்த கதிரையில் அமரும்படி கல்பொட தோட்ட சுப்பிரீண்டன்டன் வில்சன் சொன்னார்.
அவனும் மரியாதையுடன் கதிரையில் அமர முன் தனது நியமனக் கடிதத்தை அவரிடம் கொடுத்தான் . அதை அவர் வாங்கி பிரித்து வாசித்த பின்.
” நல்லது சோமா .இது தான் உன் முதல் வேலையா:”? ஆங்கிலத்தில் வில்சன் கேட்டார்.
“ எஸ் சேர் “
“ உமது மாமாவா இந்த தோட்டத்தில் எனக்கு உதவியாக இருந்து ரிட்டையரான மிஸ்டர் பியசேனா”?
“ எஸ் சேர் “
“அவர் ஒரு நேர்மையான, திறமையான உழைப்பாளி . எனக்கு பெரும் உதவியாக இருந்தவர். அதனால் அவர் உமது அம்மாவின் நிலமையை பற்றி சொல்லிக் கேட்டதும் உம்மை இந்த தொட்டத்தில் ஜூனியர் கிளார்க்காக நியமனக் கடிதம் அனுப்பினேன். அவர் போல் நீரும் நேர்மையாக வேலை செய்து முன்னுக்கு வரவேண்டும். நீர் பிரதம கிளார்க் செல்லையாவுக்கு உதவியாளராக இருப்பீர். அவர் உமக்கு நீர் செய்ய வேண்டிய வேலைகள் பற்றி பயிற்ச்சி தருவார். நீர் தங்குவதற்கு ஒழுங்குகள் செய்துள்ளது. அதைப் பற்றிய விபரம் உமக்கு செல்லையா சொல்லுவார். நீர் தங்கப் போகும் பங்களாவில் உம்மோடு இன்னும் மூவர் இருப்பார்கள். ஒரு வேலைக்காரன் உங்கள் நால்வருக்கும் சமைத்து தருவான். மாதம் ஒரு சிறு தொகை உமது அறை வாடகைக்கும், உணவுக்கும் சம்பளத்தில் கழிக்கப்படும. மிகுதி பணம் உமது வங்கிக்கு போகும்.. முழு விபரமும் செல்லையா உமக்குச் சொல்லுவார் “ என்றார் சுப்பிரீண்டன்டன் வில்சன்
“ தங்கியூ சேர் “
அதன் பின் சோமசிரியை அழைத்து சென்று எல்லோருக்கும் அறிமுகம் செய்து வைத்தார் சுப்பிரீண்டன்டன் வில்சன்
சோமசிரி வேலை செய்ய ஆரம்பித்து ஒரு மாதத்துக்குள் விரைவாக வேலையைக் கற்றான். சோமசிரி அதிகம் பேச மாட்டான் . அவனோடு வேலை செய்தவர்கள் அனைவரும் அவனிலும் வயது கூடியவர்கள் . காலப் போக்கில் சோமசிரியின் அரும்பு மீசை, வளர்ந்த தலை முடி, நடை , உடையை பார்த்து கொஞ்சம் கொஞ்சமாக கிண்டல் செய்யத் தொடங்கினார்கள். அவனுக்கு அது ஆத்திரத்தைக் கொடுத்தது. தாய் தனக்கு சொல்லி அனுபியதை மனதில் நினைத்து அவன் பொறுமையை இழக்கவில்லை.
ஆனால் விரைவில் தலைமை லிகிதர் செல்லையா, சோமசிரியின் வேலையில் பிழை கண்டு பிடித்து நக்கலாக பேசத் தொடங்கினார். அலுவலக ஊழியர்களில் பெரும்பாலோர் செல்லையாவோடு சேர்ந்து அவனில் குறை கண்டு பிடித்து சோமசிரியின் போறுமையை சோதித்தனர். அவனை வார்த்தைகளால் துன்புறுத்தி மகிழ்ந்தனர் . எல்லா பகிடி வதைகளையும் தாங்கிய படி சோமசிரி மெளனமாக இருந்து வேலை செய்தான். ஒரு சமயம் வேலையில் இருந்து ராஜினாமா செய்யவும் நினைத்தான். தன்னுடைய வேலையை இழந்துவிடாலாம் என்பதால் எந்தவிதத்திலும் அவர்களுக்கு அவன் பதிலடி கொடுக்க விரும்பவில்லை. சுப்பிரீண்டன்டன் வில்சனுக்கு போய் முறையிடவும் அவனுக்குப் பயம். தக்க சமயம் வரும் போது அவர்களுக்குத் தகுந்த பாடம் கற்பிக்க அவன் மனதுக்குள் திட்மிட்டான்.
****
ஒரு நாள் கல்பொட தோட்டத்து தேயிலை தயாரிப்பாளர் (Tea Maker) ராபர்ட் என்பவர் தன் வீட்டில் நடக்க இருக்கும் இரவு பார்ட்டிக்கு விருந்தினர்களாக அலுவலகத்தில் வேலை செய்வோர், சுப்பிரீண்டன்டன் டேவிட் நீக்கலாக வரும்படி அழைத்திருந்தார். பார்ட்டியில் மது தாராளமாகப் பரிமாறப்பட்டது. . சோமசிரி ஊழியர்களில் ஒருவராக இருப்பதால், அழைப்பை மறுக்க முடியாது கலந்து கொண்டான்
பார்ட்டிக்கு வந்திருந்தவர்களில் சோமசிரி ஒருவன் தான் 21 வயதுள்ளவன். மற்றவர்கள் அனைவரும் முப்பது வயதுக்கு மேற்பட்டவர்கள். பார்டிக்கு வந்திருந்தவர்க்ள் சோமசிரியை சீண்டி மகிழ்ந்தனர் . அவனை மது அருந்தும் படி வற்புறுத்தினர். அவன் மறுத்து விட்டான். சோமசிரி அவர்களின் விளையாட்டுப் பொம்மையானான். அவனை அணிந்திருந்த காலணியை கலட்டி தலையில் வைத்து நடனம் ஆடச் சொன்னார்கள் அவன் மறுத்து விட்டான் . சிலர் அவனை குத்துக் கர்ணம் அடிக்கச் சொன்னார்கள். அதற்கும் அவன் முடியாது என்று மறுத்து விட்டான். பகிடி வதை எல்லையை மீறியது. செல்லையா அதிகாரத் குரலில “சோமசிரி நான் கட்டளையிடுகிறேன் நீ அவசியம் குடிக்கத்தான் வேண்டும்” என்றார் . அவருக்கு பதில் சொல்லாமல் தன் கோபத்தை அடக்கிக் கொண்டு சோமசிரி விலகி சென்றான். விருந்துக்கு கூப்பிடிருந்த ராபர்டும் அவனை குடிக்கும் படி வற்புறுத்தினர். அவருக்கும் சோமசிரி மறுத்து விட்டான். உடனே செல்லையாவும் ராபர்டும் ஒன்றாக சேர்ந்து அவனின் தலையில் விஸ்கியை ஊற்றினார்கள்.அதை பார்த்து வந்திருந்தவர்கள் கை தட்டி சிரித்தார்கள். சோமசிரியின் கோபம் பொங்கி எழுந்தது. சாது மிரண்டது . மேலும் அவனால் பொறுக்க முடியவில்லை. தனது ஜெர்சிக்குள் ( ஜம்பர்) மறைக்கப்பட்ட கத்தியை வெளியே எடுத்து கதிரையில் இருந்து விஸ்கியை ரசித்துக் குடித்துக் கொண்டிருந்த செல்லையாவின் நெஞ்சில் ஓங்கி குத்தினான். அந்த குத்தில் சொமாசிரியின் கோபம் தெரிந்தது. கத்தியின் நுனி செல்லையாவின் உடலை ஊடுருவிச் சென்று அவரின் முதுகுக்கு பின் போயிற்று. அந்த குத்து செல்லையாவின் இருதயம் இருந்த இடம். இரத்தம் அவரின் உடலில் இருந்து பெருகியது. சோமசிரி எந்த வேகத்தில் செல்லையாவின் உடலில் ஓங்கி குத்தினானோ அதே வேகத்தில் கத்தியை இழுத்து எடுத்தான் . அடுத்தது அவன் குறிவைத்தது பக்கத்தில் நின்ற ரபேர்டை. எந்த வேகத்தில் செல்லையாவை குத்தினானோ அதே வேகத்தில் ரபேர்டின் வயிற்றில் ஓங்கி அதே கத்தியால் குத்தினான். அவர வயற்றில் இருந்து இரத்தம் பீறிட்டு வெளி வந்தது . இந்த சடுதியான தாக்குதலை இருவரும் எதிர்பார்க்கவில்லை. பக்கத்தில் நின்ற ஆறு பேரும் அதிர்ந்து போய் நின்றனர். செல்லையாவும் ராபர்டும் தாக்குதலால் நிலத்தில் விழுந்தனர் . எல்லோருக்கும் என்ன செய்வது என்று தெரியாது திகைத்து நின்றனர்
“உங்களுக்குத் தைரியம் இருந்தால் என் அருகே வந்து பாருங்கள் , அப்போது உங்களுக்கு தெரியும் சோமசிரி யார் என்று “கோபத்தில் உரத்த குரலில் சோமசிரி சொன்னான் . கூட்டத்தில் ஒருவன் ஓடிப்போய் சுப்பிரீண்டன்டன் வில்சனுக்கு நடந்ததை அறிவித்தான். படுப்பதுக்கு ஆயித்தமாக இருந்த ஆடையுடன் கண் சிமிட்டும் நேரத்தில் அருகே இருந்த பார்டி நடந்த ரபேர்ட்டின் வீட்டுக்குப் வில்சன் போனார் .
அவரைக் கண்டதும் சோமசிரி சற்று அமைதியாகி “சேர் என்னை எல்லோரும் சீண்டி விட்டு வேடிக்கைப் பார்த்தார்கள். ஓரளவுக்கு தான் என்னால் போறுக்க முடிந்தது. நான் ஏற்கனவே வைத்திருந்த கத்தியால் இவர்கள் இருவரையும் குத்தி போட்டேன் “:சோமசிற பெரிய துறை வில்சனுக்கு சொன்னான் ,
” சோமா உன் கையில் இருக்கும் கத்தியை முதலில் கீழே போடு. பிறகு பேசுவோம்.” என்றார் வில்சன் கனிவாக.
அவரின் குரலில் சாந்தம் தெரிந்தது.
சோமசிரி மறு பேச்சு இல்லாமல் கத்தியை கீழே போட்டான்.
“சோமா அந்த கதிரையில் போய் அமைதியாக இரு. முதலில் ஓரு கிலாஸ் தண்ணீர் குடட.அதன் பிறகு நீண்ட மூச்சை இழுந்து சில தடவை விடு”
வில்சன் சொன்னபடி மேசையில் இருந்த கிளாஸ் தண்ணீரை இரு மடக்கு குடித்து விட்டு மூச்சை உள்ளே இழுத்து விட்டபடி கதிரையில் சோமசிரி இருந்தான்.
நிலத்தில் இரத்தம் ஓடக் கிடந்தவர்களை விரைவாக தாமதிக்காமல் தொட்டத்து ஆஸ்பத்திரிக்கு காரில் கொண்டு செல்லும் படி பெரிய துரை வில்சன் சொன்னார். அதற்கிடையில் நடந்ததை கேள்விப் பட்டு இரண்டு தொட்டத்து செக்யூரிட்டிகள் வந்து போலீசுக்கு போனில் நடந்த சம்பவத்தை சொன்னர்கள்
நாவலபிட்டிய போலீஸ் இன்ஸ்பெக்டரும் மூன்று போலீஸ்காரர்களும் சில நிமிடங்களில் ஜீப்பில் வந்தார்கள். அங்கே இருந்தவர்களும் பெரிய துரை வில்சனும் நடந்ததை இன்ஸ்பெக்டருக்கு சொன்னர்கள். அவர் உடனே இரு போலீஸ்கார்களை ஆஸ்பத்திரிக்கு போய் அவரகள் இருவரினதும் நிலைமை அறிந்து வர அனுப்பிய பின் விசாரணையை ஆரம்பித்தார்
****.
“ நீ தானே சோமசிரி”?
“எஸ் சேர்”
“செல்லையா என்பவரை ராபர்ட் என்பவரையும் கத்தியால் குத்தினது நீ தானே”
அமைதியான நிலை அடைந்த் சோமசிரி தலையை குனிந்த படி . “எஸ் சேர் ”
“ உனக்கு கத்தி பார்டிக்கு க வரும் போத்து ஒளித்து கொண்டு வந்தாயா”
“எஸ் சேர் ”
“எங்கிருந்து கத்தி உனக்கு கிடைத்தது?.யார் தந்தது உண்மையை சொல்’?
“பார்டி நடக்க ஒரு சில நாட்களுக்கு முன்பு எஸ்டேட் கொல்லன் பட்டறயில், சமையல் செய்ய கத்தி தேவை என்று கொல்லனிடம் சொல்லி ஒரு கத்தி ஒன்றை செய்யவித்தனான். பார்டியில் அவர்கள் இருவருககும் ஒரு பாடம் கற்பிக்க கத்தியை மறைத்து பார்ட்டிக்கு கொண்டு வந்தனான்.
“ ஏன் அப்படி உனக்கு அவர்கள் இருவர் மீது கோபம்.”?
“இந்த பார்ட்டியில் மற்றுமல்ல அதுக்கு முன்பு. இவர்கள் இருவரும் என்னை எப்போதும் கேலி செய்வார்கள். இந்த பார்ட்டியில் என் தலயில் விஸ்கியை ஊற்றினார்கள் சேர் . ஒரளவுக்கு தான் என்னால் பொறுத்துக் கொண்டு இருக்க முடியும். என்னை கிண்டல் செய்த இன்னும் சிலரையும் குத்தி இருப்பேன். அதுக்கிடையில் பெரியதுரை விலசன் வந்து விட்டார். அவர மேல் என்க்கு மதிப்பு அதிகம். அவர் சொன்ன படி கத்தியை கீழே போட்டுவிட்டேன் சேர் .” நடந்ததை சோமசிரி சுய நினைவுக்கு வந்த பின் சொன்னான்.
“ உன்னக்கு தெரியுமா அவர்கள் இருவரின் உயர்களுக்கு ஏதும் நடந்தால் உன் மேல் கொலை குற்றம் சாட்டப்படும் என்று” இன்ஸ்பெக்டர் சொன்னார் .
சோமசிரி பேசவில்லை . அந்த நேரம் ஆஸ்பத்திரிக்கு சென்ற இரு போலீஸ்கார்கலளில் ஒருவர் வந்து கத்தியால் குத்தப்பட்ட செல்லையாவும் ராபர்டும் இறந்து விட்டாரகள் என்ற செய்தி சொன்னார்
இன்ஸ்பெக்டர் உடனே சோமசிரியை கைது செய்து நாவலப்பிட்டிய போலீஸ் ஸ்டேசனுக்கு அழைத்து சென்றார் . சாட்சி சொல்ல ராபர்ட் வீட்டு பார்ட்டியில் கலந்து கொண்டவர்களும் சென்றனர்.
****
கண்டி நீதி மன்றத்தில் வழக்கு விசாரிக்கப் பட்ட போது, சாட்சிகள் சோமசிரி இந்த இரு கொலைகளையும் திட்டமிட்டு செய்யவில்லை எனவும் அவனின் கோபத்தை இறந்தவர்கள் இருவரும் தூண்டியதால் இருவரையும் கோபத்தால் சோமசிரி கத்தியால் குத்தினான் என்று பலர் சாட்சியம் சொன்னார்கள். நீதிபதி சோமசிரியின் இளமையை கருத்தில் கொண்டு அவனுக்கு இருபது வருடம் சிறைத் தண்டனை விதித்தார். அதே நேரம் வயது கூடியவர்கள் இளம் வயதினரை தேவை இல்லாமல் சீண்டக் கூடாது என்றும் குறிப்பிட்டார்
சிறையில் இருக்கும் போது சோமசிரி படித்து அறிவியல் துறையில் பட்டம் பெற்றான். அவனின் நன் நடத்தையால் பதின்இரண்டு வருடங்களில் விடுதலை பெற்று நல்வாழ்வு ஆரம்பித்தான்.
அவன் சிறையில் இருந்து வெளியே வர ,முன் அவனின் தாய் லீலாவதி கவலயில் காலமானார். சோமசிரியின் தம்பி ஜெயசிரி வக்கீலானான் அண்ணன் சோமசிரி வாழ உதவினான் . சோமசிரிக்கு நைஜீரியாவில் ஆசிரியர் வேலை கிடைத்து சென்று அங்கு சில வருடங்கள் வேலை செய்த பின் கனடாவுக்குப் புலம் பெயர்ந்ததாக கேள்வி .
(உண்மையும் புனைவும் கலந்தது) .