கறுப்பு பக்கங்கள்

பசி புசித்த
அவன் வயிற்றைப் பாருங்கள்
பசிக்கு தவமிருப்போரே!
அவனிடம் பசியை கொஞ்சம்
கடன் வாங்கி கொள்ளுங்கள்..!

ருசிக்கு புசிக்கும் போதேனும்
அவன் பசிக்கு கொஞ்சம்
பகிர்ந்தளியுங்கள்..!

பசியை விலை கொடுத்து வாங்கும்முன்
அவன் வயிற்று சத்தத்திற்கு
ஒரு நாளேனும் விலக்களியுங்கள்..!

எதிர்காலத்திற்கு சேமிப்பவர்களே..
அவன் நிகழ்காலமே கேள்விக்குறியென
நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்..!

எழுதியவர் : நிவேதா சுப்பிரமணியம் (10-Jul-18, 12:09 pm)
பார்வை : 2472

மேலே