திருமதியே இல்லறத்தாள் என் வெகுமதியே - - - - சக்கரைவாசன்

திருமதியே என் வெகுமதியே
*****************************************

*

மதியே திருமதியே யான்பெற்ற வெகுமதியே
ஆதியாய் சக்தியாய் என்னுள்ளே நிறைந்தவளே
காதிலிடும் தோட்டிற்கு வைரமதை நாடாது
காதியிலே நெசவிட்ட நூற்சேலை அணிபவளே ;

ஈனச்சொல் ஏதொன்றும் என்மீது தெளிக்காது ,
கனலாய்க் காயாது புனலாய்க் குளிர்வித்து
மனத்துள் நோகாது என்னுள் உலாவரும்
அன்பெனும் மழையே இன்பத்துள் இன்பமே .;

தாயாய்த் தந்தையாய் நல்கூறும் குருவுமாகி
பாய்ந்திடும் சபலங்கள் எமையென்றும் அண்டாது -- உன்
மெய்யோடு எனையணைத்து சேயெனக் காக்கும் நீ
நான் ஈந்த பெருவரமே இறையிட்ட கருணையிலே!
;!
அறுசுவை உணவமைத்து ஆசையுடன் பரிமாறி
விரும்பும் சுகமனைத்தும் மறுக்காது நல்வழங்கும்
தருமமிகு இல்லறத்தே சுடர்விடும் ஒளிவிளக்கே --- என்
பெருமையே நீயன்றோ இப்பயணம் தொடர்ந்திடவே.

எழுதியவர் : சக்கரைவாசன் (11-Jul-18, 3:16 pm)
பார்வை : 109

மேலே