காதல் பைத்தியம்
காட்சி பேழைக்குள்ளே நாமும் உலகமே வாழ்ந்திருக்கையிலே
எல்லாம் கனவா என் தோழி?
நம் அன்பும் பொய்த்ததோ என் தோழி?
விதியை மாற்றி எழுத மதி கொண்டேன் என் தோழி...
என்னை மதியாது நீ சென்றதும் ஏனோ என் தோழி?
அன்றைய தினம் இன்றாய் நினைவிருக்க,
வலிகள் நீ தந்த பரிசுகளாக எண்ணி எண்ணி புன்னகைக்கிறேன், நானொரு பைத்தியமாய் என் தோழி...