நான் சாப்பிடும் தட்டு

நான் சாப்பிடும் தட்டு,
கிட்டத்தட்ட சதுரத்தட்டு
அதற்கும் பல அறைகள்
சாப்பிட்டபின் மிஞ்சும் கறைகள்
விரல்கள் பரதமாடும் இடமா நீ?
இல்லை சோற்றால் அணை கட்டப்படும் நிலமா நீ?

நீ எனக்கு ஊட்டிவிடும் ஒவ்வொரு பருக்கையும்
எனக்கு ஞாபகம் வரும், அம்மாவின் மென்கையும்
சிலநேரங்களில் சோறின்றிவருந்தும் என்னின் பல தங்கையும்,
இதுபோல்வரை நினைந்து நெஞ்சம் வெட்கப்படும்-ஏனெனில்
நான் அறைகள் உள்ள தட்டில் சாப்பிடுகிறேன்
பலருக்கு சாப்பிடக்கூட அறை இல்லை என்பதை நினைத்து!!

பட்டினியால் ஒரு உயிர் போகக்கூடாது
ஆனால் நமக்கு பயிர் கொடுப்பவனுக்கு
இந்த கதி ஏற்பட்டதே? இது நாம் விளைத்த பாவம்
இதனால் இயற்கையன்னைக்கு நம்மின்மீது கோவம்
கோவம் தீர முற்படுங்கள்; விவசாயியை மதியுங்கள்;
மதியை சிறப்பாய் பயன்படுத்துங்கள்;
உலகம் உயரட்டும் நம்மால்!!!!!!!!






எழுதியவர் : ஆசைமணி (16-Aug-11, 9:41 pm)
சேர்த்தது : PRANAHITHAN
பார்வை : 292

மேலே