மொட்டுகளின் சிரிப்பு

பெரும் வெடிப்பிலிருந்து
வெளி வந்த புகை
வியந்தது மொட்டுகளின் சிரிப்பை பார்த்து .
அந்த ராட்சத பீரங்கி நடுங்கியது
குழந்தைகளுடனான அந்த பொம்மைகளின்
விளையாட்டைப் பார்த்து .
கெகெல் சிரிப்புகள் ராஜ நடை
போடுகின்றன கந்தகத்தின் மண்ணில்.
போர்களின் முட்களுக்கிடையில்
இதயங்களின் கிழிசல்களுக்கிடையில்
தோட்டாக்களின் சத்தங்களுக்கு இடையில்
எப்படி நீ கொண்டு வந்தாய்
மொட்டுகளுக்கான சிரிப்பை ?
ராமி ஆதம்
ஆம்
உயிர் இருக்கிறது உன் பொம்மைகளுக்கு .
குழந்தை தனத்தின் வேர்களை
மீட்டெடுத்த அன்னைகளாகிப் போயின
உன் பொம்மைகள் .
கண்ணீரின் வாழ்வை கலைத்து விட்டன
மொட்டுகளின் சிரிப்புகள் ...


(இராக்கில் போரினால் அவதிப்படும் குழந்தைகளுக்கு தன் உயிரையும் பொருட்படுத்தாமல் பொம்மைகள் விநியோகம் செய்து அவர்களின் குழந்தைத்தனமான சிரிப்புகளை மீட்டெடுத்து கொண்டிருக்கும் ராமி ஆதம் என்ற நண்பருக்கு சமர்ப்பணம் )

எழுதியவர் : பா. நிபி (22-Jul-18, 11:08 am)
Tanglish : mottukalin sirippu
பார்வை : 47

மேலே