ஹைக்கூ கவிஞர் இரா இரவி

ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !


தினமும் இருமுறை
நேரம் காட்டியது
ஓடாத கடிகாரம் !

சுகமானது
பகை
இல்லாத வாழ்வு !

வழிவகுக்கும்
அழிவிற்கு
தற்பெருமை !

சும்மா கிடந்த சங்கை
ஊதிடும்
அரசியல்வாதி !

சொன்னால்
வெட்கக்கேடு
இன்றைய அரசியல்!

பண மதிப்பு இழப்பால்
மதிப்பிழந்து
நாடு !

உண்மையானது
படியில் பயணம்
நொடியில் மரணம் !

உணர்க
உதவினால்
உயரலாம் !

தேன் ஒழுகப்பேசி
தெருவில் விடுவது
அரசியல் கூட்டணி !

ஆவதும்
அழிவதும்
சொல்லாலே !

நாய்வாலை நிமிர்த்த முடியாது
திருத்தவே முடியாது
அரசியல்வாதிகளை !

.
மரம் நடும் விழா
நட்டதோடு சரி
ஊற்றுவதில்லை தண்ணீர் !

மூன்று பக்கம் கடலால் மட்டுமல்ல
வரிகளால் சூழ்ந்த
இந்தியா !

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (31-Jul-18, 7:33 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 140

மேலே