இரங்கல் பா முன்னால் முதல்வருக்கு
இரங்கல் பா
தமிழன் நான் ஒரு பாதகன்......
எமை விட்டு செல்லும் வரை உணராது போனேனே....
எம் மீது காட்டின கரிசனையை அறியாது போனேனே...
நாள்தவறினும் செய்த உதவிகள் எத்தனை எத்தனை....
சிந்தித்து அறியாது போனேனே....
உம் துக்கங்களை உம் இதய நாணிலே வைத்து மீட்டிட்டாய்..
இதயமில்லா பாவி நான்...
புன்னகையால் மறைத்திட்டாயே...
உம் புன்னகைதான் உதிக்கும் சூரியன்...
சுடர் விடும் மகிழ்ச்சியே அன்று உதவிக்கரம் நீட்டிட அந்தோ அறியாது போனேனே....
படி ஏறி சிங்காசனத்தில் அமர்த்தாமல் தளபதியை படி ஏற விட்டோமே...!
தமிழன் தனிமரமாய் நிற்கிறான்.....!
நீர் சுமைதாங்கியாய் நிற்பதை தமிழே எம்மை விட்டு பிரியும் வரை அறியாது போனேனே...
இக்கானக பாதையை முடித்திட்டீர்....!
இனி நீர் வரமாட்டீர்...
உறங்கப்போகிறீர்... தமிழே தமிழுக்குத் தாலாட்டுப்பாடிடு
கண் உறங்கட்டும்.
தோமஸ் சக்கரியா.