பதினாறு பேறுகள் - சகோதரி ஆசிரியைக்கு வாழ்த்து மடல்

பதினாறு பேறுகள்
நன்மாணாக்கர்களை இவ்வுலகிற்கு அறிமுகம் செய்கிறவளே
அன்புச் செல்வத்தை அபரிதமாய் பொழிபவளே
அமைதியாய் இல்லறத்திற்கு மேலும் அழகு ஊட்டுபவளே
நோயின்மையின் உன்னதத்தை உலகிற்கு வலியுறுத்துபவளே
என்றும் இளமையாய் இனிமையாய் பிரதிபலிப்பவளே
கணிதக் கல்வியைக் கணிசமாய் கற்பிப்பவளே
வாழ்நாள் முழுவதும சுற்றமும் நட்புக்காக அர்ப்பணித்தவளே
நல்வினையை நாளெல்லாம் தடையில்லாமல் புரிபவளே
பெருமையை சிறிதளவும் சிந்தையில் கொள்ளாதவளே
துணிவோடு இடர்களை முழுதாய் துடைத்தொழிப்பவளே
வலிமையோடு பிறர் கவலைகளை களைபவளே
வெற்றியை எப்பொழுதும் அனைவரோடும் பகிர்பவளே
நல்லுணர்வை என்றும் நம் சமுதாயத்திற்கு ஊட்டுபவளே
புகழுக்கு எப்பொழுதும் அடிமை ஆகாதவளே
கணித சூத்திரங்களை மாணவர்களுக்கு துல்லியமாக நுகர்பவளே
நல்ல நண்பர்களை என்றும் நீ விட்டுக்கொடுப்பதில்லை
இப்பதினாறு பேறுகளையம் ஒருங்கே பெற்றவளே
உன் கல்விப் பணியில் மேலும் தழைத்தோங்கிட
வாழ்த்துக்கள்

எழுதியவர் : ராரே (13-Aug-18, 4:20 pm)
பார்வை : 91

மேலே