அடப்போங்கடா.. இனி சாவதற்கு எங்களிடம் ஒன்றுமே இல்லை

ஊரெங்கும் சிதறிக் கிடக்கும் உடல்கள்..
பரிதாபமாய் பறிபோகும் உயிர்கள்..

இறந்த தாய் மார்பிழுக்கும்
பசித்த பிள்ளைகள்..

அச்சத்தில் கற்பிழக்கும்
இளவயது பெண்கள்..

மலையென குவிந்து கிடக்கும்
மனிதப் பிணங்கள்..

சுடச்சுட நிரம்பிக் கிடக்கும்
குருதிக் குளங்கள்..

அழத் திராணியற்று வற்றிப்போன
கண்ணீர்த் துளிகள்..

அவமானம் அடித்த வலி தாங்கா
ஊமை மனங்கள்..

கூடிக்களித்த உறவுகள் இல்லை..
தாங்கிப் பிடித்த வீடுகள் இல்லை..
ஆடித் திரிந்த நாடின்று இல்லை..
ஆறுதல் சொல்ல யாருமே இல்லை..

அடப்போங்கடா..
இனி சாவதற்கு
எங்களிடம் ஒன்றுமே இல்லை…


எழுதியவர் : (19-Aug-11, 9:27 am)
பார்வை : 278

மேலே