கணவன்-மனைவி உரையாடல்-- கலப்படம் பற்றி
கணவன் (மனைவி இடம்) ; ஏண்டி, எங்கிருந்து வாங்கிட்டுவந்த
இந்த தேனை- அப்பட்டமான
கலப்படத் தேனாக இருக்கே, ஒரே
வெல்லத்தை வாசனை................
மனைவி : போதுமுங்க............. உங்களுக்கு இப்படி
சொல்ல என்ன அருகதை இருக்கு.....
யோசீன்க கொஞ்சம் ............நீங்க என்ன
பண்ணிட்டிருக்கீங்க................. மிளகுல
பப்பாளி விதை, பருப்பு வகைல ஏதேதோ
சுனை, குப்பை, கல்லு ...............
இத்தனையேன் ......வீட்டிலே கறக்கும்
பசும்பாலில் தண்ணீர் கலந்து கோவிலுக்கே
'சப்ளை, .....................ஏங்க இப்படி,
தன்வினை தன்னைச்சுடும்னு........ நீங்க
வாங்கிட்டுவர சொன்ன தேன்ல எவனோ
கலப்படம் செய்றான்.... உங்க மாதிரி....
தேன் உங்களுக்கு மருந்தொடு கலந்துண்ண...
அதுல கலப்படம்.....ஐயா பயந்துடீங்க........
நீங்க செய்யற கலப்படத்தில் கோவில்கூட
விட்டுவைக்கலையே.........
கணவன் : எனக்கு வந்து வாய்ச்சிருக்கப்பாரு .............
மனைவி : உண்மை யாருக்கு எடுபடுமுங்க......!!!!!!!!!!!!