ஏணிகளாய் வந்தவர்கள்

ஏணிகளாய் வந்தவர்கள் ?
தோளில் ஏணியுடன்
ஏணியில் ஏறினான்
தளத்தை அடைந்து
அதன் மேல்
ஏணியை வைத்து
அதன்மேல் ஏறியவன்
அடுத்த தளத்தில் படுத்திருந்த
ஏணியை எடுத்து
சுவர் மேல் சாய்த்து
அதன் மேல் ஏறி
அடுத்த தளத்தில் இருந்த
ஏணியை எடுத்தவன்
ஏறி வந்த ஏணி வழியாக
தோளில் ஏணியுடன்
கீழே இறங்கினான்
ஏணியை கீழே வைத்து
மீண்டும் ஏணியில்
ஏறினான் அதன் மேல்
முன் வைத்திருந்த
ஏணியை எடுத்தவன்
தோளில் ஏணியுடன்
கீழே சாய்ந்திருந்த
ஏணியில் இறங்கினான்
ஏணியை கீழே வைத்து
ஏணியில் ஏறியவன்
முன்னர் சாய்ந்திருந்த
ஏணியை எடுத்து
தோளில் ஏணியுடன்
கீழே இறங்கியவன்
ஏணியை வைத்து விட்டு
தரையின் தளத்தில்
சாய்த்து வைத்திருந்த
ஏணியை எடுத்து ……

ஏணிகளாய் !
யாரோ ஒருவர்
நம் வாழ்க்கையில்
வந்தவர்கள்?
அவர்களை சுமப்பதும்
வைப்பதும் தொடர் கதையே


(இது ஒரு நான்கு தள கட்டிட வேலை நடந்து கொண்டிருந்த போது ஒரு நிகழ்ச்சி)

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (1-Sep-18, 10:54 am)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 137

மேலே