காதலில் தோல்வி
நமக்குள் காதல் சேர்த்ததே
நமக்குள் முதலில் தோன்றிய நட்பே
விதிவசமா ஏனோ காதலே நம்மை
இன்று பிரித்து வைத்துவிட்டது
பிரிவில் பெண்ணே நான் வருந்துவதெல்லாம்
நமக்குள் காதல் ஏன் வந்ததோ என்றுதான்
நட்பில் நாம் உயர்ந்தே இருந்தோம்
காதல் வேண்டாம் அந்த நட்பை மட்டும்
மீட்டு கொடுத்துவிடுவாயா ?