நண்பனின் பிரிவு
மண்ணில் விதைக்கப்பட்டோம்
அன்னையின் மடியினிலே நம்மையும் அறியாமல்
நட்பினில் கறைந்தோம்
கதை பல பேசினோம்
கருத்தொருமித்தோம்
காதல் கொண்டோம் ஒரு பொழுது காணாமல்
முகம் காணாமல்
இருந்ததில்லை
நினைத்தாலே அன்பு பூரிக்கும்
நீ அருகே இருப்பதினால்
எத்தனையோ இடங்கள்
சுற்றிருப்போம்
உனக்கும்
எனக்கும்
பிடித்திருக்கும்
விதி அது சதி செய்தது
வீணாக உனை பிரித்தது
விண்ணுக்கும் சென்றுவிட்டாய்
வினா என்ன என புரியவில்லை
வீடு பல நிகழ்ந்தாலும் இவ்விழப்பை ஈடுகட்ட
எவராலும் முடியாது
உன்னை தவிர்த்து யாரவர் தோள் கொடுப்பார்
உன் குடும்பம் தவிக்கிறதே
ஆற்றிடவும் தேற்றிடவும்
சொந்தங்கள்
பல உண்டு - ஆனாலும்
உன்னை
போல் நேசம் வைக்க
எவரேனும் இருப்பாரோ
பேரிழப்பே நீயாக
பெருந்துன்பம் வேறும் உண்டோ
வீணாக சென்று விட்டாயே
விடை தெரியாமல் வெம்புகின்றேன்
எத்தனை முறை அழுதாலும்
உன் பிரிவை ஏற்றுக்கொள்ள
என் மனம் தவிக்கிறது
ஏனடா சென்று விட்டாய்
இன்னும்
பல காலம் இருந்திருக்க கூடாதா
நித்தமும் உன் நினைவு தான்
எங்களுக்கே இப்படி என்றால்
உன் மனைவி குழந்தை எவ்வாறோ
ஏனடா இப்படி செய்தாய்
இன்னும் சில காலம் இருந்திருக்க
கூடாதா