முதுமலைக்காடு சுற்றுலா அனுபவம்

முதுமலைக்காடு என்றால்
மனதில் வருவது முதுபெரும் மரங்களும்
காட்டின் பசுமைத் தோற்றங்களும்
மிருகங்கள் பறவைகள்முதலியனவும்

மனங்கொள்ளா ஆசை அவற்றை எல்லாம் நூல்களில் படித்துள்ளோம்
தொலைக்க காட்சி சானல்களில் பார்த்துள்ளோம் ஆனாலும்
நேரில் பார்ப்பதுபோல் வருமா /இது ஒரு அரிய சந்தர்ப்பம்
வெளிநாட்டில் இருந்து வந்த குடும்ப உறவினர்களுடன்
சுற்றுலா சென்றோம் ,
அப்போது முதுமலைக் காடு பார்க்க கிளம்பினோம்
பார்க்க பார்க்க பயங்கரம், நாங்கள் ஒரு ஜீப்பில் தான் சென்றோம்
பயங்கரமான ஆனால் படு சுவாரசியமான பயணம் ,
ஜீப்பின் ஓட்டுநர் முழி பிதுங்க பிதுங்க ஜீப்பை ஓட்டினார்
அவரைப் பார்க்க பார்க்க நாங்கள் நடு காட்டிற்குளே
செல்கிறோம் என்ற பயமும் அவ்வப்போது,
கொஞ்சத் தூரம் பொட்டைக் காடாகவும் போகப் போக திகில் நிறைந்த காடாகவும்
அனுபவித்தோம், மிகப் பெரிய மிருகங்களைக் கண்டதும் ஓட்டுநர் எங்களை
எப்படிக் கூட்டி செல்ல போகிறார் எனப் பயந்தோம்
இடையில் எங்கள் அற்ப ஆசை பயத்தின் மத்தியிலும் தூரத்தில் நின்றபடி லாவகமாய் படங்கள் எடுத்தோம்
ஆனால் ஜீப் ஓட்டுநர் அவர் எங்களை சத்தம் போடாது இருக்க சைகை காட்டினார்
நாங்கள் அமைதியானோம், அங்கே பயத்தினால் மயான அமைதி நிலவியது . சிறிது நேரம் கழித்து
ஓட்டுநர் அடுத்த திசையில் ஜீப்பை நகர்த்தினார்,
வழியில் ஒரு பொட்டைக்காடு அதில் பசுமையும், பட்டமரங்களும், காய்ந்துபோன முள் செடிகளும் நீரூற்று அங்கங்கே , சிறிய குட்டைகளும், குளங்களும் உயிர்வாழும் ஜீவன்களின் தாகம் தணிக்க அது ஒரு காட்டு பாலைவனமாக தோன்றியது , அதிலேயும் விடவில்லை அந்தக் காட்டுக்குளே இறங்கி நின்று அழகிய இயற்கையின் சூழலை எங்களுடன் சேர்த்து படங்கள் எடுத்துக் கொண்டோம். ஓட்டுனருக்கு ஒரே பயம்
நாங்கள் அவரை நம்பி ,
ஆனாலும் என்றும் கடவுள் எங்களுடன் நம்பிக்கை எங்களுக்கு ,

மீண்டும் திரும்பி விட்டோம்
மீண்டும் வந்த பாதை எப்படி கண்டரோ ஓட்டுநர், என்று நாங்கள் ஒரே சிரிப்பும் மகிழ்ச்சியும்
ஓன்று இரண்டு மணிநேரம் அந்தத் திகில் நேர அனுபவம் மறக்கமுடியாது . அந்த ஜீப்பும் ஓட்டுனரையும் மறக்க முடியவில்லை இன்றும்,
மனிதன் வாழ்ந்தான் என்பதிலும் என்ன சாதித்தான், என்பதுதான் முக்கியம் ,
பயமும் வாழ்க்கையின் முக்கிய அம்சம் ,
உண்மையில் இது ஒரு சாதனையாக நினைக்கின்ரேன்
பயமும் ஓர் அழகிய அனுபவம்.

எழுதியவர் : பாத்திமாமலர் (12-Sep-18, 1:12 pm)
சேர்த்தது : பாத்திமா மலர்
பார்வை : 122

மேலே