கவலை சிந்தாது என் கண்ணீர்

தெருவோரம் போன காற்று
ஜன்னல் வந்து தட்டி
உன்னை என்னிடம் கேட்கின்றது.
பதில் சொல்லத்தெரியாமல்
ஊமைவிழிகள்
இமைகளுக்குள் ஒழிகின்றது.

மனம் இறந்த பின்பும்
உயிரோடு ஏன் வாழ்கின்றாய்
நினைவுகள் கேட்டுக் கொல்கின்றது.
உண்மைகளை
உரைப்பேனா? மறுப்பேனா?
உமிழ் நீராய்த் துப்பிடுவேனா?
ஊமை காணும் கனவாக
எனக்குள்ளே புதைக்கின்றேன்.

ஊணமா பின்பும்
உழைக்கத்தான் விரும்புகின்றேன்.
சகிப்புக்களோடு
சாதிக்க துடிக்கின்றேன்.

வலிகளைக் கண்டவனுக்கு
வாழ்க்கை புரியும்.
காரம் உண்டவனுக்குத்தானே
வயிறு எரியும்.

கவலைகளை கண்டபோதும்
நான் கண்ணீர் சிந்தவில்லை,
வீணாக எதையும்
சிந்த நான் விடுவதில்லை.

எழுதியவர் : கமல்ராஜ் (20-Aug-11, 10:11 am)
சேர்த்தது : கமல்ராஜ்
பார்வை : 421

மேலே