பெற்றோரைக் காப்போமா
பெற்றோர் மூலமாய் வாழ்வில் யாவையும்
பெற்றவர் அவரை உதாசீனம் செய்வது
இத்தரை காணும் தீராத பெரும் சோகம்
மூத்தவர் வயதில் வந்து மூத்திடும் வேளை
காத்திடல் கடமை இதனை மறப்பது கயமை
கர்த்தர் சிவன் புத்தன் அல்லாஹ் போதனை
எத்தனை உலகில் மனிதா ஏனிந்த வேதனை
அஷ்றப் அலி