மூன்றாகும் வெண்பா

வெண்ணிலவே ! விண்ணுலவும் மென்மதியே ! மெல்லிசையாய்
மண்மயங்கும் விண்டலத்தின் வல்லவியே ! - விண்ணுரசும்
வெண்பிறையே ! வில்வியக்கும் வித்தகியே ! விண்ணோரின்
வெண்விளக்கே ! மெல்லின மே!
விண்ணுலவும் மென்மதியே ! மெல்லிசையாய் மண்மயங்கும்
விண்டலத்தின் வல்லவியே விண்ணுரசும் - வெண்பிறையே !
வில்வியக்கும் வித்தகியே ! விண்ணோரின் வெண்விளக்கே !
மெல்லினமே! வெண்ணில வே !
மெல்லினமே! வெண்ணிலவே ! விண்ணுலவும் மென்மதியே !
மெல்லிசையாய் மண்மயங்கும் விண்டலத்தின் - வல்லவியே !
விண்ணுரசும் வெண்பிறையே ! வில்வியக்கும் ! வித்தகியே !
விண்ணோரின் வெண்விளக் கே !
சியாமளா ராஜசேகர்