ராமு- சோமு உரையாடல், சிரிக்க, சிந்திக்க

ராமு : ஏண்டா, சோமு ,இப்படி காலங்கார்த்தால
கையிலே தந்தி பேப்பர் கையுமா
ஏதோ மனசுக்குள்ள பேசிகிட்டு
சிரித்துக்கொண்டும் வர.................ஏதோ
விஷயம் இருக்கு .........கொஞ்சம் சொல்லிட்டு போடா
இன்னிக்கு நீ டவுனுக்கு போயிட்டு வரணும்
வீட்டு சாமான், மாட்டு தீனி எல்லாம் வாங்கணும் இல்லையா

சோமு : ஐயா, உங்ககிட்ட சொல்லமா என்னங்க ....
பட்டணத்துல, அதாங்க சென்னைல ஒரு பய
அப்பன் கிட்ட சொத்தெல்லாம் எழுதி வாங்கிகிட்டு
அவரை ஓர் அனாதை இல்லத்துக்கு போகும்படி
நிலைமைக்கு தள்ள..... அங்க ஒரு நல்ல மனம்
இவரை போலீஸ் ஸ்டேஷன் கூட்டிட்டு போய்
இன்ஸ்பெக்டருக்கு விவரம் சொல்ல, இன்ஸ்பெக்டர்
அந்த பயல விசாரிச்சு, அப்பாவை ஒழுங்கா பார்த்துக்க
இல்லாட்டி ௫ ஆண்டு சிறையில் தண்டனை அனுபவிக்கனும்
அவர் சொத்து அவரிடமே போய் சேரும்னு சொல்ல .
பய அப்பாவை வேறு வலி இல்லாம வீட்டுக்கு
கூட்டிட்டு போனானுமுங்க...............

ராமு : இது சோமு, காலம் செய்ற கோலமடா................
சொத்துக்கு தாய் தலை கொய்தான் ஒரு பாவி.
இப்படி பெத்த தந்தையை அனாதை இல்லத்துக்கு
அனுப்பின மவன்.....................
பெத்த மனம் பித்து, பிள்ளை மனசு கல்லு

சோமு : அதாங்க ஐயா, அந்த செய்தி படிச்சு இப்படியுமா
பசங்க உருவாரங்கனு நெனெச்சேன் ......சிரிப்பு
வந்ததுங்க இந்த வாழ்க்கையை நெனெச்சு....
நாளைக்கு என் பையன் எப்படி நடந்துப்பானு
சிந்தனையும் ஓடுதுங்க மனசுக்குள்ள...

ராமு : உன் நெனப்பு சரிடா ..............
கவலைப்படாத............. உன் புள்ள
எனக்கு தெரியும் ஒன்ன,... அவன்
கண்போல பார்த்துப்பான்.............

சோமு சரிங்க ஐயா............ நான் இதோ டவுன் பஸ் .........வந்தாச்சு
போயிடு வரேனுங்க

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (3-Oct-18, 8:40 am)
பார்வை : 112

சிறந்த நகைச்சுவைகள்

மேலே