ரத்தக் கவிதை
இரத்த தானத்தால்
ஓர் உயிர் பிழைக்கும்
காதலியின் கண்ணீருக்கு
நெஞ்சில் சிந்தும் ரத்தம்
காதலை வாழ வைக்கும்
எல்லையில் சிந்தும்
ரத்தம்
நாட்டை பாதுகாக்கும்
மொழிக்காக
இனத்திற்காக
நதிக்காக
மாநில
எல்லைகளுக்காக
சாதிக்காக
சமயத்திற்காக
ஆலயத்திற்க்காக
அரசியலுக்காக
சிந்தும் ரத்தம்
வரலாற்றை
ரத்தக் கறை
படிந்த
காகிதங்கள்
ஆக்கிவிடும்
----கவின் சாரலன்