தொடுவானம்- 2
விமானி நான் தினம் தினம்
விமானம் ஓட்டுகிறேன் -ஒரு நாள்
கூட அந்த வானைத் தொட முடியவில்லை
அடியே என் அழகிய பெண்ணே
எந்தன் கவிதைக்கு நாயகியே
உன்னை என் கண் பார்வை தொட்டாலும்
உன் பார்வை என் பார்வையோடு கலந்தாலும்
உன்னைத் தொட்டுவிட ஆசை இந்த
அந்த வானைத் தொட முடியா நெஞ்சிற்கு
ஆனால் அது உன் சம்மதம் கொண்டுதான்
என்று கூறுகிறது என் உள்ளம் -சொல்லடி பெண்ணே
உன் சம்மதம், காத்திருப்பேன் உனக்காக
அதுவரை, உன்னை வானமாய் நினைத்து,
இந்த உனக்கு தெரியாமல் உன்னை
நேசிக்கும் விமானி.
அவன் அவளை பாத்தாலும் அவள்
இன்னும் அவனைப் பார்க்கவில்லையே
எப்போது பார்ப்பாள்... எப்போது சம்மதம்
சொல்லி இவனுக்கு தொடுவானம் ஆவாள்
இன்னும் இவன் ஒட்டிக்கொண்டிருக்கிறான்
விமானம்- தொடுவானம் அவன் எதிரே அவளாய்
எப்போது இவன் கரம் தொடும் அவளை!